பருக
பழரசம்!

பார்க்க
பரவசம்!!

படிக்க
நவரசம்!!!

வள்ளலார் இராமலிங்க அடிகள்

இராமலிங்க அடிகள் (1823 - 1874)

அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் ஓர் ஆன்மீகவாதி ஆவார். இவர் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவிலுள்ள மருதூரில் பிறந்தவர். பெற்றோர் இராமையாபிள்ளை - சின்னம்மாள். இராமலிங்கர் பிறந்த எட்டாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார். தாயார் குழந்தைகளோடு பொன்னேரி சென்று வாழ்ந்தார். பின்னர் சென்னையில் குடியேறினார்.

தன் வாழ்வின் பெரும்பகுதியை சென்னையில் வாழ்ந்த இவர், நவீன சமுதாயங்களின் பிரச்சினைகளை உணர்ந்திருந்தார். அனைத்து சமய நல்லிணக்கத்திற்காகவும் (சமரச சமயம்) சன்மார்க்கத்திற்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்து பணியாற்றினார். இந்நோக்கத்தை அடையும் பொருட்டு சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் சத்திய ஞானசபை மற்றும் சத்திய தருமசாலை அமைத்தார். அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடையதாக கருதப்பட்டாலும், தற்பொழுது உலகெங்கும் அவருடைய சிந்தனைக்கு ஒத்த கொள்கைகள் புரிந்துகொள்ளப்பட்டு பின்பற்றப்படுகிறது.

சமயநெறியில் சமரசத்தைப் பரப்ப முன் வந்த பெரியார் இராமலிங்க அடிகள். இறைவன் மீது இவர் பாடிய பாடல்கள், அருட்பா என்ற பெயரில் தொகுக்கப் பெற்றுள்ளன. ஆற்றெழுத்தான உரைநடை நூல்களையும் இவர் இயற்றியுள்ளார். இவர் தம் கடிதங்கள் திருமுகப்பகுதியில் தொகுக்கப் பெற்றுள்ளன. வடலூரில் சமரச சன்மார்க்க சங்கத்திற்கெனத் தனிமனை வகுத்து இறைத் தொண்டாற்றி வந்தார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த அருட்கவியென இவரைக் குறிப்பிடலாம்.

அமைதியான இயற்கை ஒட்டிய வாழ்வு பெறவும், என்றென்றும் தடைபடாது அழியாத மெய்வாழ்வு பெறவும் நமக்கு வள்ளல் பெருமான் வழிவகுத்துக் கொடுத்துள்ளார்கள். ஆதாவது, நமது ஆன்மாவின் கண் பல திரைகளால் முடப்பட்டுருப்பதாகவும் அவற்றை நீக்கி கொண்டு, ஏமசித்தி, சாகக்கல்வி, தத்துவநிக்கிரஹம் செய்தல், கடவுள் நிலையறிந்து அம்மயமாதல் ஆகிய நான்கு புருஷார்த்தங்களை நாம் பெறுமாறு நமக்கு எடுத்து அருளியுள்ளார்கள். இவ்வாறு முடிந்த முடவாகிய சிவானந்த அனுபவமே தவிர மற்றுவேரில்லை என்றும் அவ்வனுபத்தை எல்லோரும் தன்னைப் போல் பெற ஒரு மார்க்கத்தை கண்டார்கள், அது தான் சமரச சுத்த சன்மார்க்கம் என்னும் ஓளி நெறி மார்க்கமாகும்.

வாடிய பயிரைக் கண்ட போதல்லாம் வாடினேன் என்ற வள்ளல் பெருமான், நாம் உண்மையையும் புனிதமும் பெறும் பொருட்டு அருளியதே திருவருட்பாவாகும். திருவருட்பா பாடல்கள் முழுவதும் உள்ளத்தை உருக்குவன. ஆழ்ந்த கருத்துகளை கொண்டன. ஊன் உருக்கி உள்ளெளி பெருக்கும்.

திரு அருட்பா - முதல் ஐந்து திருமுறைகள் Download
இராமலிங்க அடிகள் வரலாறு Download
பல்வகைய தனிப்பாடல்கள் Download
சித்தி வளாகம் Download
தமிழ் மண்ணின் தந்தை Download
திருவருட்பா Download
திருவருட்பா அகவல் Download
வள்ளலார் - திருச்சிற்றம்பலம் Download
சுத்த சன்மார்க்க விளக்கம் Download
வரலாற்று முகங்கள் Download
திருவருட்பா ஆறாவது திருமுறை Download
திருவருட்பா Download
உபதேச குறிப்புகள் Download
Copyright 2017 © Reserved, Tamilnavarasam Visitor Counter. Website designed by Glad India Technologies Pvt. Ltd.,