பருக
பழரசம்!

பார்க்க
பரவசம்!!

படிக்க
நவரசம்!!!

தணிகைமணி வ.சு.செங்கல்வராய பிள்ளை

திருப்புகழ் பதிப்பாசிரியரான சிவஞானச் செல்வர், வடக்குப்பட்டு சுப்பிரமணிய பிள்ளையின் இளைய மகனான இவர், அன்றைய தென்னாற்காடு மாவட்டத்திலுள்ள மஞ்சக்குப்பத்தில் பிறந்தார்.
1888-1891-ஆம் ஆண்டுகளில் அரசு ஊழியரான இவரின் தந்தையார் நாமக்கல்லில் பணியாற்றியதால், அங்குள்ள கழகப் பள்ளிக்கூடத்தில் தணிகைமணி மூன்றாம் வகுப்பு வரை பயின்றார். அதன் பிறகு கும்பகோணம், திருவாரூர், மதுரை ஆகிய ஊர்களில் தனது பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். 1901-ஆம் ஆண்டில் சென்னை மில்லர் கல்லூரியில் மெய்யியல் பட்டமும், பின்னர் அதே கல்லூரியில் தமிழ்ல் முதுமாணிப் பட்டமும் பெற்றார்.
கல்வியில் சாதனையாளராக விளங்கிய தணிகைமணி, அலுவலகப் பணியிலும் தனது முத்திரையைப் பதித்தார். இவரது பணியைப் பாராட்டி ஆங்கிலேய அரசு ராவ் சாகிப், ராவ் பகதூர் ஆகிய பட்டங்களை வழங்கிச் சிறப்பித்தது.
முருகனைப் பற்றிய பாடல்கள் அனைத்தையும் தொகுத்து, "முருகவேள் பன்னிரு திருமுறை' என்ற தொகுப்பையும் தந்துள்ளார். இதனுள் திருப்புகழ் கந்தரலங்காரம், கந்தரநுபூதி, திருவகுப்பு, சேய்த்தொண்டர் புராணம் முதலியன உள்ளன. தணிகைமணி, திருப்புகழுக்கு மிக எளிமையான உரையை எழுதிப் பதிப்பித்துள்ளார். 1951-ஆம் ஆண்டு முதல் இவரின் திருப்புகழ் உரை வெளிவரத் தொடங்கியது. இதை அவர், இதழ் போன்றே பகுதி பகுதியாக வெளியிட்டுள்ளார். அவரின் திருப்புகழ் பதிப்பு முயற்சியானது தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெறுகிறது எனலாம்.

அருணகிரிநாதர் - வரலாறும் நூலாராய்ச்சியும் Download
அருணகிரிநாதர் Download
காசி மஹாத்மியம் Download
சித்தன் கதை Download
சிவபராக்ரம் Download
தனிப்பாடல்கள் Download
தணிகைப் பத்து Download
திருமந்திரம் Download
திருப்புகழ்ப் பதிப்பாசிரியர் வரலாறு Download
திருத்தணிகை Download
வள்ளி கல்யாணம் Download
வேல், சேவற் பாட்டு Download
Copyright 2017 © Reserved, Tamilnavarasam Visitor Counter. Website designed by Glad India Technologies Pvt. Ltd.,