பருக
பழரசம்!

பார்க்க
பரவசம்!!

படிக்க
நவரசம்!!!

ஜெ.ஆர்.ரங்கராஜூ

ஜெகதாபி ரகுபதி ரங்கராஜு பாளையங்கோட்டையில் பிறந்தார். ஐந்தாறு நாவல்களும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒன்றாக 1916 முதல் 1923 வரை வெளி வந்தன. அச்சுக்கூட சொந்தக்காரரான இவர் மொத்தம் பத்தாயிரம் பிரதிகளை அச்சிட்டு ஒவ்வொரு ஐநூறு பிரதிகளையும் ஒரு பதிப்பாகக் குறிப்பிட்டு பத்து பதிப்புகள் வரை தன் நாவல்களை வெளியிட்டார். ராஜாம்பாள், ராஜேந்திரன், சந்திரகாந்தா, ஆனந்தகிருஷ்ணன் என்று ஒவ்வொரு நாவலும் வெளியாகும்போது வாசகர்கள் மிகவும் பரபரப்பாக வாங்கிப் படித்தனர்.
வரதராஜன் என்ற நாவல் இரண்டு பாகங்கள் வெளிவரும் வரையில் ஒன்றும் தடங்கல் இல்லை. அந்த நாவலிற்கு ஒரு வழக்குப் பதிவான பின், மேலே எதுவும் எழுதிப் பிரசுரிக்கக் கூடாது என்று எழுதுவதை நிறுத்தி விட்டார். தாடி வளர்த்து, நாமம் போட்டுக் கொண்டு பார்ப்பதற்கு மிகவும் கம்பீரமாக இருப்பார்.
இவரது துப்பறியும் நிபுணர் கோவிந்தன் – ஷெர்லாக் ஹோம்ஸின் தமிழ் அவதாரம் என்று கூறப்பட்டது. இவரது படைப்பான ராஜாம்பாள் இருபத்தாறு வருஷங்களில் இருபத்தாறு பதிப்புகள் வெளி வந்தன. இன்னோர் நாவலான சந்திரகாந்தா 1936ல் தன்னுடைய ஆறாவது பதிப்பை எட்டியது.
இவரது படைப்புகளை தமிழக அரசு 2009 ஆம் ஆண்டு நாட்டுடைமையாக்கியது.

ஜெயரங்கன் Download
இராஜாம்பாள் Download
இராஜேந்திரன் Download
Copyright 2017 © Reserved, Tamilnavarasam Visitor Counter. Website designed by Glad India Technologies Pvt. Ltd.,