பருக
பழரசம்!

பார்க்க
பரவசம்!!

படிக்க
நவரசம்!!!

புதுமைபித்தன்

புதுமைப்பித்தன் கதைகள் என்னும் நூல் ஒரு சிறுகதைத் தொகுப்பாகும். இந்நூலின் தொகுப்பாசிரியர் எம். வேதசகாயகுமார் இத்தொகுப்பு புதுமைப்பித்தனின் 103 சிறுகதைகளைக் கொண்ட முழுமையான தொகுப்பாகும். புதுமைப்பித்தன் பதிப்பகத்தாரால் இதன் முதல் பதிப்பு 2002 ஆம் ஆண்டும் 2008 ஆம் ஆண்டில் மறுபதிப்பும் வெளியிடப்பட்டது. இந்நூல் புதுமைப்பித்தனின் மனைவி கமலா விருத்தாலத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. புதுமைபித்தன் கதைகள் - சில ஆய்வுக் குறிப்புகள் எனத் தலைப்பிடப்பட்ட ஆசிரியரின் முன்னுரை புதுமைப்பித்தனின் கதைகளை அடையாளங்காண எடுத்துக் கொள்ளப்பட்ட முயற்சிகளையும் ஆதாரங்களையும் விளக்குகிறது. முன்னுரையைத் தொடர்ந்து 103 சிறுகதைகளும் வரிசையாக இடம்பெற்றுள்ளன. அட்டையின் பின்புறம் எழுத்தாளர் ஜெயகாந்தனின் உரை இடம்பெற்றுள்ளது. புதுமைப்பித்தனின் சிறுகதைகளின் தொகுப்புகள் பல, வெவ்வேறு ஆசிரியர்களால் தொகுக்கப்பட்டு வெவ்வேறு பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளன.
புதுமைப்பித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட சொ. விருத்தாசலம் (ஏப்ரல் 25, 1906 - மே 5, 1948), மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார்.
கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகின்றன. இவரது படைப்புகள் தமிழ் இலக்கியத்தில் மிகவும் அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ளன. 2002ல் தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமை ஆக்கியது.

அகல்யை Download
செல்லம்மாள் Download
இரண்டு உலகம் Download
காலனும் கிழவியும் Download
கடவுள் Download
கடவுளும் கந்தசாமியும் Download
மிசின் Download
மனைவி Download
மனிதயந்திரம் Download
ஒரு நாள் Download
படபடப்பு Download
பொன்னகரம் Download
சிறுகதை பகுதி-1 Download
சிறுகதை பகுதி-2 Download
தெரு விளக்கு Download
சிறுகதைகள் Download
Copyright 2017 © Reserved, Tamilnavarasam Visitor Counter. Website designed by Glad India Technologies Pvt. Ltd.,