பருக
பழரசம்!

பார்க்க
பரவசம்!!

படிக்க
நவரசம்!!!

வாணிதாசன்

புதுவையை அடுத்த வில்லியனூரில் 22-07-1915 இல் அரங்க திருக்காமு -துளசியம்மாள் ஆகியோருக்கு மகவாகப் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் அரங்கசாமி என்ற எத்திராசலு என்பதாகும். இவர் 'ரமி' என்னும் புனைப்பெயரும் கொண்டவர்.
கவிஞரேறு, தமிழ்நாட்டின் வேர்ட்வொர்த், பாவலர் மணி,தமிழ்நாட்டுத் தாகூர் என்ற சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
இவர், பாவேந்தர் பாரதிதாசனிடம் தொடக்கக் கல்வி பயின்றவர். இவர்தம் பாடல்கள், சாகித்திய அகாதெமி வெளியிட்ட 'தமிழ்க் கவிதைக் களஞ்சியம்' என்ற நூலிலும் தென்மொழிகள் புத்தக வெளியீட்டுக் கழகம் வெளியிட்ட புதுத்தமிழ்க் கவிமலர்கள் என்ற நூலிலும் மற்றும் பற்பல தொகுப்பு நூல்களிலும் இடம் பெற்றுள்ளன. உருசியம், ஆங்கிலம் முதலிய மொழிகளில் இவர் பாடல்கள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவர் பிரெஞ்சு மொழியிலூம் புலமை பெற்றவர். 'தமிழ்-பிரெஞ்சு கையகர முதலி' என்ற நூலை வெளியிட்டுள்ளார்.
பிரெஞ்சு குடியரசுத்தலைவர் இவருக்கு 'செவாலியர்' என்ற விருதினை வழங்கியுள்ளார். மேலும் 'கவிஞரேறு', 'பாவலர் மணி' முதலிய பட்டங்களும் வாணிதாசனுக்கு வழங்கப்பட்டுள்ளன. தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லுநர். 34 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணிபுரிந்தவர்.
இவரின் கவிதை வளத்தை உணர்ந்து திரு.வி.க. அவர்கள் வாணிதாசன் ஒரு பெரும் உலகக் கவிஞர் ஆதல் வேண்டும்' என்று கூறினார். மயிலை சிவமுத்து "தமிழ்நாட்டுக் தாகூர்" என்று புகழ்ந்துரைத்தார். 07-08-1974 ஆம் ஆண்டு இவர்தம் 59ஆம் அகவையில் இயற்கை எய்தினார்.

எழிலோவியம் Download
இனிக்கும் பாட்டு Download
கவிதைகள் தொகுப்பு Download
பாட்டுப் பிறக்குமடா Download
பெரிய இடத்துச் செய்தி Download
பொங்கற் பரிசு Download
சிரித்த நுணா Download
தமிழச்சி Download
தீர்த்த யாத்திரை Download
தொடுவானம் Download
Copyright 2017 © Reserved, Tamilnavarasam Visitor Counter. Website designed by Glad India Technologies Pvt. Ltd.,