பருக
பழரசம்!

பார்க்க
பரவசம்!!

படிக்க
நவரசம்!!!

தமிழ் கவிதைகள்

என் தமிழ் மொழி

தமிழ்மொழி இனிமை மொழி .....
உலகின் பழமொழி தோற்றதுக்கு ....
உயிர் கொடுத்த மூலமொழி .....
" ழ் " என்ற சிறப்பு உச்சரிப்பை .....
உன்னதமாய் கொண்ட மொழி ....!!!

தேன் சுரக்கும் இனியமொழி ....
உச்சரிக்ககூடிய் எளிய மொழி ,,,,,
மொழிகளில் பழமை மொழி .....
மொழிகளில் சிறப்பு மொழி .....
உலகத்திலே தனித்துவ மொழி ....!!!

தமிழன் என்றால் ஒழுக்கமே ....
தமிழன் என்றால் பண்பாடே .....
தமிழன் என்றால் கற்பே ......
தமிழன் என்றால் வீரமே ....
கற்று கொடுப்பது என்றும் ....
எங்கள் தமிழ் மொழியே .....!!!

இந்தியத் தேசம்

இத்தனை ஓட்டைகளுடன்
ஒட்டுப் போட்டச் சட்டையைப் போல!
ஓட்டு வாங்கியவுடன்
தொகுதி மறந்த அரசியல்வாதி!

பணம் மட்டுமே பெரும்பங்காய்!
மகத்துவம் இழந்த மருத்துவம்!
விஞ்ஞானமெல்லாம் வில்லனாய் உருவெடுக்க!
மனிதாபிமானமெல்லாம் நாயும் குரங்கும்.

உழைப்பின்றி பணம் செய்ய
பலவழிகள் கண்டனர்!
தியாகிகளே உருவாகவில்லை என்றாலும்
புகழ்ச்சிக்கு பஞ்சமில்லை!

இத்தனை ஓட்டைகளுடன்
சல்லடையாய் இந்தியத் தேசம்!
மாற்றங்கள் விரும்பும் மனம்
தேசம் வளர்க்க தீமைகள் புரிவதில்லை

ஒவ்வொருவரும் உறுதியெடுத்தால் ஒழிய
ஓங்கிட முடியாது!
வளர்ச்சி காண வேண்டுமென்றால்
வீரம் வளர்க்க வேண்டும்!

உழவுத் தொழில்

வேளாண்மை செய்பவனை
மேலாண்மை செய்பவன் மிதிக்கிறான்

பாவம் உழவன்
மண்ணோடு பாதி நாள்
மாடுகளோடு மீதி நாள்

உழுது முடித்த சனம்
அழுது முடிக்கும் முன்னே
பொழுது முடிந்துவிடும்

வயிறு ஒட்டி சோகம் அப்பி
தேகம் மெலிந்த இவர்கள் தான்
இந்த தேசத்தின் வேர்களாம்?

கார் இல்லையென்றால்
கால்கள் இருக்கின்றன,
விமானம் இல்லையென்றால்
அவமானம் இல்லை.
தானியம் இல்லையென்றால்
சூனியம் தானடா!

குறுக்கு வலிக்க
உழைத்தக் கூட்டம்
குடிசையை விட்டு உயரவில்லை;
குறுக்கு வழியில்
பிழைத்தக் கூட்டம்
கோடிகள் சேர்க்க அயரவில்லை.

கலப்பைகள்கூடக்
கவலை கொள்ளும் - இவர்
களைப்பறியா உழைப்பு கண்டு!
கள்ளிச் செடியும்
கலவரம் கொள்ளும்.

விவசாயம்

தற்போதைய விவசாயி
தன் பிள்ளைக்கு
விவசாயம் வேண்டாமென
மறுத்துக் கைவிடும் போது,
அவன் மட்டும் போகவில்லை,
ஆயிரமாண்டு விவசாய நீட்சியும்
அத்தோடு அறுபட்டு போகிறது..!!

மெய்ஞ்ஞானம் கொண்டவர்கள்
விவசாயத்தின்
விஞ்ஞானக் கரை காண
மறுக்கிறார்கள்,
தன்னை மண் மூடினால் புரியும்
ஒரு பிடி மண்ணின் அருமை..!!

கைப்பிடியளவு உள்ள
இந்த மண்ணில் தான்
வாழ்க்கை இருக்கிறது,
கவனமாக காப்பாற்றினால்
காலத்திற்கும் பிழைக்கலாம்..!!
அழிக்க நினைத்தால்
அழிவது மனிதகுலம்தான்..!!

இன்றைய விவசாயத்தின் நிலைமை

நிலங்கள் வீடு ஆயின
களங்கள் காடு ஆயின
விவசாயி விண்ணோடு போறான்
விவசாயம் மண்ணோடு போகிறது.....

உரிமைக்காக பிச்சை எடுத்தோம்
இருநூறு ஆண்டு _ இனி
உணவுக்காக பிச்சை எடுப்போம்
எத்தனை ஆண்டோ ?.....

பல கிராமத்தில் பலரை காணோம்
பல இடத்தில் கிராமத்தை காணோம்
சிற்பங்கள் அழிந்துவிட்டால்
கோயிலுக்கு சிறப்பில்லை
சிற்பிகளே அழிந்துவிட்டால்
கோயிலுக்கே பிறப்பில்லை.....

விவசாயி அழிந்துவிட்டால்
உண்ணகூட வழியில்லை
விவசாயம் அழிந்துவிட்டால்
வருந்தி பின் பயனில்லை.....

நிலத்தை வித்து பணத்தை போட்டால்
வங்கி பணம் வட்டி தரும் _ வாய்
பசிக்கு ரொட்டி தருமா ?.....

பணத்தை மட்டும் அறுவடை
பண்ண முடிந்தால்_ அம்பானியும்
அரசியல் வாதியும் ஆடு மாடு
மேய்த்து விவசாயி ஆகி இருப்பான்.....

விவசாயத்தை துறந்த நாடும்
விவசாயியை மறந்த நாடும்
உருப்பட முடியாது _ உண்மை
இன்று புரியாது.

விவசாயம்

1. ஒரு ஏக்கரில் நெல் போட்டா - ரூபாய் 10,000

2. ஒரு ஏக்கரில் கரும்பு போட்டா - ரூபாய் 15,000

3. ஒரு ஏக்கரில் வாழை போட்டா - ரூபாய் 20,000

4. ஒரு ஏக்கர பிளாட்டா ( Plots ) போட்டா - ரூபாய் 1.5 கோடி

படிக்காதவன் பட்டா ( Patta ) போடுறான்

படித்தவன் பிளாட் போடுறான்

படிக்காதவன் வியர்வையை போட்டு சோறு போடுறான்.

தலைமுறையை சீரழித்தார்

குடி குடியை கெடுக்கும் என்ற விளம்பரங்கள்
குடிக்கின்ற இடத்தினிலே வைத்து விட்டு
குடிப்பதற்கு வசதிகளை செய்து தந்து
குடிமக்கள் அரசென்றே பெயரைப் பெற்றார்
ஊர்தோறும் பள்ளிகளைத் திறந்தது போல
குடிப்பதுவே தொழிலாக இளைஞர் கூட்டம்
ஊர்நடுவே மதுக்கடைகள் திறந்து வைத்துப்
பார்எங்கள் வளர்ச்சியென்றே மக்கள் வாழ்வை
கல்லூரி பள்ளிகளின் எதிரில் வைத்து
கற்பதற்குப் பதில் குடிக்க வைத்தார்
பல்லோர்கள் பார்க்க படம் எடுத்தனுப்பி
பார்தூற்ற தலைமுறையைச் சீரழித்தார்.

நெகிழி உபயோகித்தால்

பாலிதீன் பைகள்
தேசத்தின் தூக்கு கயிறு...
மீன்கள் முதல்
மான்கள் வரை
மாண்டு போகும்.
ஈக்கள் முதல்
பூக்கள் வரை
மலடாகும்.

உற்பத்தி

சிகரெட் இல்லாமல் ஒருவரால் வாழமுடியும் - ஆனால்
சிகரெட் உற்பத்தியாளர் பணக்காரராக இருக்கிறார்
மது இல்லாமல் ஒருவரால் வாழமுடியும் - ஆனால்
மது உற்பத்தியாளர் பணக்காரராக இருக்கிறார்
மொபைல் இல்லாமல் ஒருவர் வாழமுடியும் - ஆனால்
மொபைல் உற்பத்தியாளர் பணக்காரராக இருக்கிறார்
உணவு, உடை இல்லாமல் ஒருவராலும் வாழமுடியாது - ஆனால்
விவசாயிகள்,நெசவாளிகள் ஏழைகளாகவே இருக்கின்றனர்.

உன்னை

நேசிப்பவர்களை எண்ணி சந்தோசப்படு
வெறுப்பவர்களை எண்ணி துக்கப்படாதே
ஆதரிப்பவர்களை எண்ணி உற்சாகப்படு
எதிர்ப்பவர்களை எண்ணி சோர்வடையாதே
பாராட்டுபவர்களை எண்ணி திருப்தியாயிரு
விமர்சிப்பவர்களை எண்ணி அதிர்ப்தியடையாதே
உயர்வாக எண்ணுபவர்களோடு நன்றியோடிரு
அற்பமாக எண்ணுபவர்களோடு வெறுப்படையாதே
உதவுபவர்களை ஒரு போதும் மறவாதே
உதவாதர்களை எண்ணி கசந்து கொள்ளாதே.

Copyright 2017 © Reserved, Tamilnavarasam Visitor Counter. Website designed by Glad India Technologies Pvt. Ltd.,