பருக
பழரசம்!

பார்க்க
பரவசம்!!

படிக்க
நவரசம்!!!

பொன்மொழிகள்

»»நம்பிக்கையுள்ள மனிதனுக்கு எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்,முட்கள் இல்லை.

»»முட்டாளின் முழு வாழ்க்கையும், புத்திசாலியின் ஒரு நாள் வாழ்க்கைக்குச் சமம்

»»ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை,முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

>»»நான் மெதுவாக நடப்பவன்தான்; ஆனால், ஒருபோதும் பின் வாங்குவதில்லை.

>»»வெற்றி என்பது லட்சியத்தைப் படிப்படியாகப் புரிந்து கொள்வது

>»»தளராத இதயம் உள்ளவனுக்கு, இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை .

>»»உங்களிடம் அறிவொளி இருந்தால் அந்தத் தீபத்திலிருந்து மற்றவர்கள் மெழுகுவத்திகளை ஏற்றிக்கொள்ளட்டும்.

>»»ஒரு மனிதனின் உண்மையான தன்மையை அறிய வேண்டுமானால், அவனுக்கு அதிகாரத்தை கொடுத்துப் பாருங்கள்.

>»»உண்பதற்காக வாழாதே, உயிர் வாழ்வதற்காக உண்.

>»»பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை , மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.

>»»சுறுசுறுப்புடன் எல்லாவற்றையும் செய்கிறவனுக்கு, எல்லாக் கதவுகளும் திறந்திருக்கும் .

>»»உன் வாழ்க்கையில் எப்போது தோல்விகள் நிற்கிறதோ, அப்போது வெற்றியும் நின்று விடுகிறது.

>»»ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

>»»அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.

>»»உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டுகொள்வதுதான் வளர்ச்சியின் அடையாளம்.

>»»நீங்கள் விரும்புவது கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்குத் தகுதியானது கண்டிப்பாகக் கிடைத்தே தீரும்.

>»»விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம், இல்லையேல் உரம்.

>»»நேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும் நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில்.

>»»முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை! முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!

»»நீ வீணாக்கும் ஒவ்வொரு நொடியும் உன்னை வறுமைக்குள் தள்ளிவிடும்.

»»இந்த உலகம் அதிகம் பேசாதவனை விரும்புகிறது, அளந்து பேசுபவனை மதிக்கிறது, துணிந்து செயல்படுபவனையே வணங்குகிறது.

»»பேச்சில் இனிமை, கொள்கையில் தெளிவு, செயலில் உறுதி ஆகிய மூன்றும் உள்ளவரால் எதையும் சாதிக்க முடியும் .

»»சிக்கனம் என்பது பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது .

»»ஒரு பள்ளிக்கூடத்தைத் திறப்பவன், ஒரு சிறைச்சாலையை மூடுகிறான்.

»»பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.

»»எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.

»»உங்களைத் தவிர வேறு எந்த மனிதரையும் கண்டு நீங்கள் எச்சரிக்கையாக இருக்கத் தேவையில்லை.

»»உன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.

»»உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே.

»»வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.

»»உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.

»»பெருமைக்காரன் கடவுளை இழப்பான், கோபக்காரன் தன்னையே இழப்பான், பொறாமைக்காரன் நண்பனை இழப்பான்.

»»எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.

»»நீ இறக்கும்போது உனக்காக அழக்கூடியவர்களை உன் உயிருள்ளபோதே தேடி வைத்துக்கொள்.

»»கஷ்டப்படாமல் இஷ்டப்பட்டது கிடைக்காது.

»»இந்த உலகத்தில் நம்மை நேசிப்பவர்கள் நம்மிடம் இல்லையென்றாலே, நாம் அனாதைதான்.

»»அருகில் இருந்தால் அன்பு அதிகரிப்பதும், தொலைவிலிருந்தால் அன்பு குறைவதும் இல்லை.

»»வாழ்க்கையில் தட்டி விட்டவர்களையும், தட்டிக் கொடுத்தவர்களையும் மறக்கக் கூடாது.

»»முயலும்,ஆமையும் வெல்லும் - முயலாமை எப்போதும் வெல்லாது.

»»சந்தோஷமாக வாழ முயற்ச்சிக்காதே, நிம்மதியாக வாழ நினைத்தால் சந்தோஷம் தானாக வரும்.

»»பதவி வந்தால் பணிவும்,தோல்வி வந்தால் துணிவும், வெற்றியடைந்தால் கனிவும் வேண்டும்.

»»மூச்சுவிட்டுக் கொண்டிருப்பவனெல்லாம் மனிதன் இல்லை, மூச்சிருக்கும் வரை முயற்சி செய்பவனே மனிதன்.

»»நெல்லுக்கு கேடு புல், மனிதனுக்கு கேடு ( இன்னா ) சொல்.

»»நன்மை செய்யும்போது பாராட்டாமல், தீமை செய்யும்போது தூற்றாதே.

»»விழுவதெல்லம் எழுவதற்குத்தானே தவிர, அழுவதற்காக அல்ல.

»»தோல்வியே வெற்றியின் முதல் படிக்கட்டு.

»»ஒருவரை பிடிக்கவில்லை என்றால் விலகிவிடு, பொய்யாக பழகாதே.

»»ஒருவர் உன்னை தாழ்த்தி பேசும்போது மெளனமாய் இரு, புகழ்ந்து பேசும்போது அமைதியாய் இரு.

»»தட்டிப் பறிப்பவன் வாழ்ந்ததில்லை, விட்டுக் கொடுப்பவன் வீழ்ந்ததில்லை.

»»குறையை முகத்திற்கு முன்னாலும், நிறையை முதுகிற்கு பின்னாலும் சொல்லவும்.

»»ஒரு பூ அழகாக இருக்கிறதே என்று நினைத்தாலே, நாம் பேராசைப்பட்டவர்கள் என்றுதான் அர்த்தம்.

»»சம்பாதிக்க interest ( ஆர்வம் ) இருந்தால்தான், பணத்தை ( வட்டி ) interest-க்கு கொடுக்க முடியும்.

»»கடினமான செயலின் சரியான பெயர்தான் - சாதனை.

»»இன்பத்திலும்,துன்பத்திலும் மனம் விட்டு பேசினால்தான் உண்மையான அன்பு வெளிப்படும்.

»»பணம் உன்னிடம் இருந்தால் உனக்கு யாரையும் தெரியாது, பணம் உன்னிடம் இல்லை என்றால் உன்னை யாருக்கும் தெரியாது.

»»முடியும் என்பது மூலதனம், முடியாது என்பது மூடத்தனம்.

»»நல்லவற்றை கற்றுக்கொள், தீயவற்றை விலக்கிக்கொள், அறிவை பெருக்கிக்கொள், நேரத்தை ஒதுக்கிக்கொள்.

»»நல்லெண்ணம் மேலோங்கி இருக்க தொடங்கும் போது தோல்வி அடைவதும்,துவள்வதும்,தடுமாறுவதும்,தடம் புரள்வதும் சாதாரணம்.

சறுக்கல் சாதாரணமில்லை சறுக்கலில் இருந்து மீள்வதும் சாதாரணமில்லை எனினும் மீண்டாகத்தான் வேண்டும்.

»»தோல்வி புதைமணலில் துவண்டு மூழ்கிவிடக் கூடாது தோல்வியே துவண்டால் உலகம் நம்மை துண்டாடும்,தோல்வியில் இருந்து மீண்டால் உலகம் நம்மை கொண்டாடும்.

»»வாழ்வியல் கொள்கைகள்,கோட்பாடுகள் மற்றும் தத்துவங்களில் ஒருவருக்கு சரியெனப் படுவது மற்றொருவருக்கு தவறு எனப்படுகிறது.

»»ஒரு பக்கம் தவறு சுட்டிக் காட்டப்படுவது மறு பக்கம் சரியென அங்கீகாரம் பெறப்படுகிறது. எனவே சரி,தவறு என்பதெல்லாம் தனிமனிதக் கண்ணோட்டம் தான்.

»»வீழ்ச்சியில் இருந்து மீட்சி அடையாமல் முடங்குதலே மிகப்பெரும் தவறு,தோல்வியிலிருந்து மீள்வது மிக முக்கியம் - வழுக்கிய பின்னும் வாழ்வது முக்கியம்,சறுக்கிய பின்னும் சாதிப்பது அதை விட முக்கியம்.

»»பிறர் வந்து காயப்படுத்தும் வரை உங்களின் வலி உங்களுக்கே தெரியாது.

»»கோபப்பட்டு பதட்டத்தில் வார்த்தைகளை கொட்டாதீர்கள். அந்த சொல் உயிர் போகும் வரை வலிக்கும்.

»»நாம் தேவையில்லை என்று சிலர் நம்மை நினைக்க துவங்கும் முன் விலகி நிற்க கற்றுக்கொள்வது நல்லது.

»»எதிலும் குறைகளை காண்பவர்களுக்கு ரசிக்க தெரியாது எதையும் ரசிப்பவர்களுக்கு குறைகளே தெரியாது.

»»மானம் ஒன்றே நம்மை வீழ்த்தக்கூடிய ஒரே ஆயுதம் அது தெளிவாக இருக்கும் வரை நாம் ஒருவராலும் வீழ்த்தப்படுவதில்லை.

»»உன் முதுகிற்கு பின்னால் பேசுபவர்களை பற்றி கவலைப்படாதே நீ அவர்களுக்கு இரண்டு அடி முன்னால் இருக்கிறாய் என்று பெருமைப்படு.

»»உனக்கு அனுபவம் ஆயிரம் இருந்தாலும் அன்பாய் பழகுபவர் உடனிருந்தால் எல்லாமே வெற்றிதான்.

»»வெற்றி வந்தால் பணிவு அவசியம் தோல்வி வந்தால் பொறுமை அவசியம் எதிர்ப்பு வந்தால் துணிவு அவசியம் எது வந்தாலும் நம்மிக்கை அவசியம்.

»»தேய்த்து கழுவினாலும் போகாதது கறை ( கையூட்டு ) பட்ட கை.

»»வாழ்க்கை மெழுகுவர்த்தி போலத்தான் தூரத்தில் பார்த்தால் ஒளி தெரியும் அருகில் பார்த்தால் கண்ணீர் தெரியும்.

»»இதயத்திற்கும் நண்பனுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு இருவருமே வாழ்க்கைக்காக துடிப்பவர்கள்.

»»எப்போதுமே நீங்கள் பிரச்சனையை சந்திக்கவில்லை என்றால் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

»»இன்பமும் துன்பமும் வாழ்க்கை என்ற காலக் கடிகாரத்தில் நிரந்தரமாக அமைவதில்லை.

»»வெறுப்பவர்களை நினைக்காமல் நேசிப்பவர்களை மட்டுமே நினைக்கவும்.

»»நல்ல நண்பனை விரும்பினால்,நல்ல நண்பனாய் இரு.

»»அன்பினால் பகைமையையும், செயலினால் சோம்பேறித்தனத்தையும் வெல்லலாம்.

»»மன்னிக்கும் குணம், மாமனிதரின் அடையாளம்.

»»எதை விதைக்கிறோமோ, அதைத்தான் அறுவடை செய்ய முடியும்.

»»உலகம் என்பது கடவுளின் திருவிளையாடற்கூடம்.

»»பிறரின் குறைகளை காண்பது எளிது,நமது குறைகளை அறிவது அரிது.

»»திட்டம் இல்லாத வாழ்வு, ஒளி இல்லாத வீடு.

»»துருப்பிடித்து தேய்வதைவிட, உழைத்து தாழ்வதே மேல்.

»»படித்தவன் சிந்திக்கிறான்,சிந்திக்கிறவன் முன்னேறுகிறான்.

»»மனிதனின் கெட்ட குணங்களை வெறு,மனிதனை வெறுக்காதே.

»»தனியாக செல்லும் மனிதன், எதிலும் அதிவேகமாக முன்னேறுகிறான்.

புகழ்ச்சிதான் இகழ்ச்சியின் ஆரம்பம்.

»»தேவையற்றதை வாங்காதே,தேவையானதை விற்காதே.

»»நாயிடம் கடன் பட்டால்,அதையும் அய்யா என்றுதான் கூப்பிட வேண்டும்.

»»பல பழங்களை பார்த்துக் கொண்டே செல்பவன்,கடைசியில் அழுகிய பழத்தையே வாங்குவான்.

»»அதிர்ஷ்டம் உள்ளவனுக்கு, சேவலும் முட்டையிடும்.

»»உறவு போகாமல் கெட்டது,கடன் கேட்காமல் கெட்டது.

»»கை நீட்டி கேட்பது கேவலம்,அதைவிட கேவலம் இல்லையென்பது.

»»நூல்நிலையம் என்பது ஆடம்பரமல்ல,அத்தியாவசியம்.

»»கடனாக பத்துக்கு விற்பதைக் காட்டிலும்,ரொக்கமாக எட்டு பெறுவதே மேல்.

»»காதுகளை மட்டும் நம்பாதே,அது காலத்தின் குறைபாடு.

»»கணவன் ஊதாரியானால் பாதிவீடும்,மனைவி ஊதாரியானால் முழுவீடும் பாழ்.

»»வாழ்பவனை வாழ்த்தாவிட்டாலும்,தாழ்ந்தவனை தூற்றாதே.

»»நீங்கள் செய்ய முடிந்ததை,பிறரை கொண்டு செய்யக்கூடாது.

»»முதலில் பேசுவதை கேட்டு,பிறகு பதில் அளிக்கவும்.

»»கடன் கேட்டு ஏழையானாலும்,கடன் கொடுத்து பாழாகாதே.

»»நாயோடு சரிசமமாக பழகலாம்,ஆனால் கையிலிருக்கும் கம்பை விட்டு விடாதே.

»»கோபத்தோடு எழுந்தால்,நஷ்டத்தோடு உட்காருவாய்.

»»தவறான பாதையில் எவ்வளவு தூரம் சென்றாலும் பரவாயில்லை,திரும்பி வந்து விடு.

»»கெட்டிக்கார சேவல்,முட்டைக்குள்ளிருந்தே கூவும்.

»»ஒருவரையும் நம்பாதவன்,எவரையும் நம்ப மாட்டான்.

»»கோயிலின் உபவாசத்தைவிட,சான்றோர்களின் சகவாசம் மேலானது.

»»முட்டாளிடம் பேசாமல் இரு,முன்னேற்றம் தானே வரும்.

»»இன்பம் சேந்து வருவதில்லை,துன்பம் தனியே வருவதில்லை.

»»உலக உறவுகளை இணைப்பது - இயற்கையே.

»»பொய்கூட சில சமயத்தில் பயனளிப்பதுண்டு.

»»ஓய்வு என்பது ஏதாவது பயனுள்ளதை செய்யும் நேரம்.

»»முட்டாள் எல்லா விசயத்திற்கும் சிரிக்கிறான்.

»»எதை நாம் அறியவில்லையோ, அது நம்முடைய தவறு.

»»பரிசு கொடுத்து நட்பை சேர்க்காதே,கொடுப்பது நின்றால் நட்பு நின்று விடும்.

»»பாராட்டுதலை விட கண்டிப்பு வரவேற்கத்தக்கது.

»»பணத்தை நினைப்பவன் அன்பிற்கு ஆட்படுவதில்லை.

»»கற்பது கடினம்,கற்றதை மறப்பது அதைவிட கடினம்.

»»திறமைசாலி மணலில்கூட கயிறு திரிப்பான்.

»»பண்பில்லாத மனிதன், மணம் இல்லாத மலர் போன்றவர்கள்.

»»தள்ளாடுவதைவிட விழுந்து எழுவதே மேல்.

»»அறிவு கண்களில் தெரியும், அன்பு முகத்தில் தெரியும்.

»»வணங்கத் தொடங்கினால் வளர்ச்சி தொடங்கும்.

»»மெதுவாக சிந்தித்து வேகமாக செயல்படு.

»»ஏழையின் சொத்து - உழைப்பு.

»»ஒரு செயலை துணிவுடன் தொடங்கிவிட்டு, முடிவைப் பற்றி கவலைப் படாதே.

»»முட்டாள்களின் மூலதனம் - கர்வம்.

»»செல்வமும்,சந்தோசமும் - எண்ணெயும், தண்ணீரும் கலந்தது போன்றது.

»»அறிவும்,அனுபவமும் சேர்ந்ததுதான் வெற்றி.

»»பொறுப்பு கசப்புதான், ஆனால் அதன் பழம் ருசியானது.

»»வயதில் இளைஞனாக இரு, அறிவில் கிழவனாக இரு.

»»ஒன்பது முறை யோசித்து, ஒரு செயலைச் செய்.

Copyright 2017 © Reserved, Tamilnavarasam Visitor Counter. Website designed by Glad India Technologies Pvt. Ltd.,