பருக
பழரசம்!

பார்க்க
பரவசம்!!

படிக்க
நவரசம்!!!

உவமைக் கவிஞர் சுரதா

சுரதா நவம்பர் 23, 1921 தஞ்சாவூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் டி ராஜகோபால். உவமைக் கவிஞர் என்று அழைக்கப்பட்ட கவிஞர் சுரதா, பாவேந்தர் பாரதிதாசனின் தீவிர சிஷ்யர்களில் ஒருவர். இதன் காரணமாக பாரதிதாசனின் இயற்பெயரான சுப்புரத்தினம் என்ற பெயருடன் தாசன் என்பதையும் சேர்த்து, சுருக்கி தனது பெயராக சுரதா என்று வைத்துக் கொண்டார்.
எண்ணற்ற நூல்களையும், கவிதைகளையும் எழுதியுள்ளார். உவமைக் கவிதைகளில் நிபுணத்துவம் பெற்றவர் என்பதால் உவமைக்கவிஞர் என்று அழைக்கப்பட்டர்.
சுரதா தனக்கென ஒரு பரம்பரையைக் கண்ட பெருமையும் சுரதாவுக்கு உண்டு. நீலமணி, பொன்னிவளவன், பனப்பாக்கம் சிதா, நன்னியூர் நாவரசன், முருகுசுந்தரம் என்று தொடரும் பட்டியல் இவ்வரலாற்று உண்மைக்குச் சான்று. மேலும் மீரா, அப்துல் ரகுமான், காமராசன் முதலிய பலருக்கும் கவிதைக் குருவாக அவர் இருந்திருக்கிறார் திரைப்படக் கதை வசன ஆசிரியர், பாடல் ஆசிரியர், கவிதை இதழ் ஆசிரியர், கவியரங்கத் தலைவர் எஞ்சிய பன்முகச் செயல்பாடுகள் கொண்டவர் சுரதா.
தன் மனத்திருப்பத்தை மேடைகளில், விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் பேசுவார். சமரசம் என்னும் பெயரிலான சரிவுக்குச் சரியென்று ஒத்துப்போகாதவர்; போயிருந்தால் விளம்பரமும் பணமும் குவிந்திருக்கக் கூடும். சுரதாவின் உளவியல், கவிதை ஆக்க நெறிமுறைகளில் தொழிற்பட்ட முறை வேறுவகையாகவே இருந்தது. இதுவே, அவரை பாரதிதாசனிடமிருந்து பிரித்துக்காட்டியது என்றும் சொல்லலாம். கொள்கைக் கவிஞர் என்பதினும் பார்க்க, கவிதையின் கவிஞர் என்னும் படிவமே அவரைப்ற்றி மேலோங்கி நின்றதற்கும் இதுவே காரணம் என்றும் சொல்லலாம்.
"நுண்புலக் கவிதை வகை" (Metaphysical Poetry) அடையாளங்களோடு தமிழ்க் கவிதையை வளர்த்தெடுத்த பெருமை சுரதாவுக்கு உண்டு. 1660 ஆம் ஆண்டுக்குப்பின் இத்தகைய நுண்புலக் கவிதைகள் வெறுத்து ஒதுக்கித் தள்ளப்பட்டன.
சுரதா, வெள்ளமாகக் கவிதையை ஒரு போதும் கொட்டிவிடுவதில்லை. ஒரு கவிதை அவரிடமிருந்து கிடைக்கப் பல மணிநேரம், ஏன் பல நாட்கள், பல மாதங்கள் கூட ஆகலாம். அவருக்குக் கவிதை என்பது ஒரு தச்சு வேலை போலத்தான். இக்காரணத்தாலேகூட, அவர் படைப்புகளை அதிகமாகச் செய்யாமல் போயிருக்கலாம்
சுரதா சில காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது சிகிச்சை செலவிற்கு அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி ரூ. 50,000 ரூபாய் நிதியுதவியும் அளித்தார்.
இந்நிலையில் ஜூன் 19, 2006 அதிகாலை சுரதா மரணமடைந்தார்.

சிறந்த சொற்பொழிவுகள் Download
சுரதா கவிதைகள் Download
சுரதா பாடல்கள் Download
தமிழ்ச் சொல்லாக்கம் Download
வினாக்களும் விடைகளும் Download
பட்டத்தரசி Download
பாவேந்தரின் காளமேகம் Download
Copyright 2017 © Reserved, Tamilnavarasam Visitor Counter. Website designed by Glad India Technologies Pvt. Ltd.,