பருக
பழரசம்!

பார்க்க
பரவசம்!!

படிக்க
நவரசம்!!!

வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியார்

வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி அவர்கள் திருப்பரங்குன்றத்திற்கு அருகில் விளாச்சேரி எனும் கிராமத்தில் கோவிந்த சாஸ்திரிகள் - லட்சுமி அம்மாள் மகனாக 06.07.1870 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் தமிழ் பேராசிரியராகப் பணிபுரிந்தார். தமிழ்மொழிக்கு மரபுமொழி அங்கீகாரம் பெற பிரச்சாரம் செய்த முதல் நபர் ஆவார். 1895-ல் சென்னை கிறிஸ்துவ கல்லூரியின் தமிழ்த்துறை தலைவராகப் பதவி உயர்வு பெற்றார்.
தமிழின் மீது இருந்த ஆர்வம் காரணமாக பல நூல்களை எழுதியதோடு மட்டுமல்லாமல் தன் பெயரையும் பரிதிமாற் கலைஞர் ( சூரிய - பரிதி , நாராயண - மால், சாஸ்திரி - கலைஞர் ) என்று தமிழ்ப் படுத்திக்கொண்டார்.
சென்னை பல்கலைக்கழகம் தமிழ் பாடத்திட்டங்களை கைவிட முற்பட்டபோது அதனை கடுமையாக எதிர்த்து போராடினார். தமிழ் மொழி மரபு மொழி என அறியப்பட வேண்டி வழக்கு தொடர்ந்தார்.
பரிதிமாற் கலைஞர் தனது 33 ஆவது வயதில் காசநோயால் பாதிக்கப்பட்டு நவம்பர் 2,1903 -இல் மரணமடைந்தார். இவர் மறைமலை அடிகள் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கும் ஓர் உத்வேகமாய் இருந்தார்.
2006 ஆம் ஆண்டு தமிழக அரசு இவரின் சொந்த கிராமமான விளாச்சேரியில் உள்ள இவரது இல்லத்தை நினைவு சின்னமாக மாற்றியது. இவரது நூல்களை நாட்டுமையாக்கி 15 இலட்சம் உரூபாய் அளித்தது. 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் நாள் இவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு அரசு சிறப்பித்தது.

தமிழ் மொழியின் வரலாறு Download
மானவிஜயம் Download
பாவலர் விருந்து Download
ரூபாவதி Download
தமிழ் வியாசங்கள் Download
சித்திர கவி விளக்கம் 2 Download
கலாவதி 1 Download
மதிவாணன் 2 Download
முடிவுறாத பிரசுரங்கள் 2 Download
நாடகவியல் 2 Download
தனிப்பாசுரத் தொகை 2 Download
Copyright 2017 © Reserved, Tamilnavarasam Visitor Counter. Website designed by Glad India Technologies Pvt. Ltd.,