பருக
பழரசம்!

பார்க்க
பரவசம்!!

படிக்க
நவரசம்!!!

ம. ப. பெரியசாமித்தூரன்

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே மஞ்சகாட்டுவலசு கிராமத்தில் பழனிவேலப்ப கவுண்டர் - பாவாத்தாள் தம்பதியருக்கு மகனாக செப்டம்பர் 26,1908 ல் பிறந்தார். 1968 ல் குடியரசு தலைவரிடமிருந்து பத்ம பூஷன் விருது பெற்றார்.
இவர் மகாகவி பாரதியாரிடமும், மகாத்மா காந்தியடிகளிடமும் மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்தார். இவர் மாணவராக இருந்தபோது கொபிசெட்டி பாளையத்தைச் சேர்ந்த ராமசாமி கவுண்டர் இவரது பித்தன் என்ற மாத இதழை வெளியிட்டார்.
600 தேசபக்தி பாடல்களும்,ஆன்மிக பாடல்களையும் இயற்றியுள்ளார்.அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட கவிஞர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். இசைக் கலைஞராக இல்லாத போதும் ஆழ்ந்த கவிதை திறமைகள் அருணாசலக் கவிராயர் போலவே இவரும் இவரது பாடல்களை அமைக்க வெளியே உதவியை நாட வேண்டியிருந்தது.
தமிழ் இலக்கியப் பணிக்காக இவரது பாடல்கள் இசை மணி மஞ்சரி என்ற தலைப்பில் ஐந்து தொகுதிகளாக வெளியிடப்பட்டன. பிற வெளியீடுகள் தூரன் கதைகள் என வெளிவந்தன. குழந்தைகளுக்காக பத்து தொகுதிகள் கொண்ட முதல் சொற்களஞ்சியம் உருவாக்கிய பெருமை இவரையேச் சாரும்.
சென்னை பல்கலைக் கழகத்தில் பி.ஏ மற்றும் எல்.டி பட்டம் பெற்றுள்ளார். மாணவ பருவம் முதல் கல்லூரி பயிலும் காலம் வரை பித்தன் என்ற மாத இதழில் பல்வேறு பாடல்கள் மற்றும் சிறுகதைகள் எழுதியுள்ளார்.
கோயம்புத்தூர் ஸ்ரீ இராமகிருஷ்ணா மடத்தில் விடுதி காப்பாளராகவும் பின்னர் தலைமை ஆசிரியராகவும் 15 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். 1948ல் தமிழ் பல்கலைக் கழகம் வெளியிட்ட 10 தொகுதிகள் 750 பக்கங்கள் கொண்ட தமிழ் பேரகராதிக்கு முதன்மை பதிப்பாசிரியராக இருந்துள்ளார். அப்பணி முடிந்தவுடன் 1978ல் பணியில் இருந்து நிறைவு பெற்றார்.
தமிழ் மொழிக்கு சிறப்பாக பணியாற்றியதற்காக 1968 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் இவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவித்தது.1970 ஆம் ஆண்டு இயல்,இசை,நாடக மன்றத்தின் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.1972ல் இசை பேரறிஞர் பட்டம் தமிழிசைச் சங்கம் சார்பில் பெற்றுள்ளார். 1979 ஆம் ஆண்டு தமிழக அரசால் செந்தமிழ்ச் செல்வர் பட்டம் பெற்று பாராட்டப் பெற்றார். இவர் தனது 79 ஆவது அகவையில் அதாவது சனவரி 20,1987ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

காற்றில் வந்த கவிதைகள் Download
தூரன் எழுத்தோவியங்கள் Download
தூரன் கவிதைகள் Download
இசை மணி மஞ்சரி Download
நல்ல நல்ல பாட்டு Download
ஆதி அத்தி Download
Copyright 2017 © Reserved, Tamilnavarasam Visitor Counter. Website designed by Glad India Technologies Pvt. Ltd.,