பருக
பழரசம்!

பார்க்க
பரவசம்!!

படிக்க
நவரசம்!!!

சிந்தனைகள்

நம் உள்ளத்தில் வாழும் ஓர் உன்னதமான தெய்வம்.

" அ " அன்புக்கு அம்மா
"ஆ " ஆசீவாதத்துக்கு ஆண்டவன்
"இ " இரண்டும் கிடைத்தால் இன்பம் ...
"ஈ " ஈகை செய்தால் வள்ளல் ...
"உ " உலகம் உன் கையில் ....
"ஊ " ஊணுண்ணும் போது பகிர்ந்து உண் ....
"எ " எழுத்தை கற்றுத்தந்தவர் இறைவன் ....
"ஏ " ஏர் பிடித்தவரே ஏற்றமானவர்கள் ....
"ஐ " ஐம்பூதங்களை அடக்குபவர் ஞானி ....
"ஒ " ஒருவருடனேயே உறவை பகிர்ந்துகொள் ....
"ஓ " பிரபஞ்சத்தின் உன்னத ஓசை .....

ஐந்து பேறு

1. ஆடம்பரமாய் வாழும் மனைவி
2. பொறுப்பில்லாமல் வாழும் தந்தை
3. ஒழுக்கமற்ற மனைவி
4. துரோகம் செய்யும் உடன் பிறந்தோர்
5. சொல் பேச்சு கேட்காத பிள்ளை.

நிலவு

எட்டாத உயரத்தில் இருக்கும் நிலாவைத் தொட
ஏக்கத்தோடு பார்க்கும் அப்பாவிகள்.
கைக்கு எட்டாத தூரத்தில் இருக்கும் நிலா
ரசிப்பதற்கு மட்டுமே!
அடைய நினைப்பது? - முட்டாள் தனம்.

நட்பு

வாழும் வரை வாழ்க்கை
வெல்லும் வரை தோல்வி
சிரிக்கும் வரை கண்ணீர்
உதிரும் வரை பூக்கள்
மறையும் வரை நிலவு
மரணம் வரை நட்பு.
நட்பை விலைக்கு வாங்க முடியாது
நண்பர்களிடம் இலவசமாக கிடைக்கும்.

துன்பம்

அனைவருக்கும் ஒன்றுதான் ஆனால் - அது
அழுபவனுக்கு கண்ணீர் தரும்
எழுபவனுக்கு தண்ணீர் தரும்.

வெற்றி

வாழ்வில் நீ வெற்றிபெறும் போதெல்லாம்
உன் முதல் தோல்வி நினைவுக்கு வந்தால்
உன்னை வெல்ல யாராலும் முடியாது.

தேடல்

தேவை முடிந்த பின்னும் தொடர்ந்து கொண்டே
இருக்கிறது சிலரது தேடல்........

வாழ்க்கை

உணமை என்னும் உயரம் ஏறப் பொய்யே ஏணி!!
கருவறையில் இருந்து இறங்கி
கல்லரையை நோக்கி நடந்து செல்லும்
தூரம்தான் வாழ்க்கை.
உலகிலேயே மிகச் சுலபமானது பிறரிடம் குறை காண்பது
உலகிலேயே மிகக் கடினமானது தன் குறை உணர்வது.

சிரிப்பு

கஷ்டப்படுகிறவனுக்கு சிரிப்பு தெரியாது
சிரிக்கின்றவனுக்கு கஷ்டம் தெரியாது
கஷ்டத்திலும் சிரிக்கிறவனுக்கு தோல்வியே கிடையாது.
உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம் - ஆனால்
உன் சிரிப்பு ஒருவரைக் கூட வேதனப்படுத்தக் கூடாது.

நண்பர்கள்

தவறு செய்தால் மன்னித்து விடாதே,மறந்து விடு
ஏனெனில் அவர்கள் உன் உறவுகள் அல்ல! உணர்வுகள்.

அப்பா

உன்னை வயிற்றில் சுமக்கும்
பாக்கியம் எனக்கில்லை - ஆகையால்
என் தோளில் சுமந்து தீர்த்துக்கொள்கிறேன்.
கடவுள் கொடுத்த வரம் கிடைக்காவிட்டால்
எனக்கு கடவுளே கிடைத்தார் வரமாக.
பொறுமையே இல்லாதவன் கூட
ஒரு குழந்தைக்கு தகப்பனாக முடியும் - ஆனால்
பொறுப்பு உள்ளவன் தான்
ஒரு தந்தையாக இருக்க முடியும்.

அன்பு

அழகை எதிர்பாக்கும் ஒருவரிடம் அன்பை காட்டாதே
உன்னிடம் அன்பு காட்டும் ஒருவரிடம் அழகை எதிர்பார்க்காதே.
அளவுக்கு அதிகமாக - அன்பை
பிறரிடமிருந்து பெறவும் கூடாது
பிறரிடம் செலுத்தவும் கூடாது.
இரண்டுமே வேதனையைத்தான் தரும்.
கண்ணுக்கு தெரிந்த மனிதரை மதிக்க தெரியாமல்
கண்ணுக்கு தெரியாத கடவுளை வணங்கி என்ன பயன்?
சிலருக்கு காட்டத் தெரியவில்லை
சிலருக்கு காட்டுவது தெரிவதில்லை
பலருக்கு காட்டுவது புரிவதே இல்லை - அன்பு
உன்னிடம் அன்பாக பேசும் பொய்யான உள்ளங்களை விட
உன்னிடம் உரிமையோடு சண்டை போடும் உள்ளத்தை நேசி.
பிடிப்பதற்கு காரணம் இருந்தும்
பிடிக்காமல் போகிறது சிலரை,
வெறுப்பதற்கு காரணம் இருந்தும்
வெறுக்க முடியவில்லை சிலரை.
மனதிற்கு பிடித்தவர்களிடம் மனம் விட்டு பேசினால்
மரண வலி கூட மறைந்து போகும்.
என் மனதிற்குள் இருக்கும் பாசம்
என் மரணம் வரை உன்னிடம் பேசும்.

தமிழ் மொழி

தடுக்கி விழுந்தால் அ....ஆ....
சிரிக்கும் போது இ....ஈ....
சூடு பட்டால் உ....ஊ....
அதட்டும் போது எ....ஏ....
ஐயத்தின் போது ஐ....
ஆச்சரியத்தின் போது ஒ....ஓ....
வக்கனையின் போது ஓள....
விக்கலின் போது ஃ....
வேற்று மொழி பேசும் தமிழர்களிடம் மறக்காமல் சொல்
உன் தாய் மொழி தமிழென்று !!!

அம்மா

உயிர் எழுத்தில் " அ "
மெய் எழுத்தில் " ம் "
உயிர்மெய் எழுத்தில் " மா "
அழகு தமிழில் கோர்த்தெடுத்த முத்து…….. அம்மா
அன்பின் சிகரம் நீ
காக்கும் தெய்வம் நீ
கருணைக் கடலும் நீ
மங்காத ஒளியும் நீ
நிறைவான நெங்சம் நீ
அரவணைக்கும் உள்ளம் நீ
மொத்தத்தில் நீதான் என் அம்மா.
வார்த்தைகளே இல்லாத வடிவம்
அளவுகோலே இல்லாத அன்பு
சுயநலமே இல்லாத இதயம்
வெறுப்பே காட்டாத முகம்........அம்மா.
விழிகளில் அழுதிட
இதழ்களில் சிரித்திட
இமைகளில் உறங்கிட
வெற்றியில் களித்திட
சித்தத்தை செதுக்கிட
உதிரத்தை துடைத்திட
இன்னலை களைந்திட
இறைவனால் படைக்கப்பட்ட
இனிய தேவதை நீ.......அம்மா.
மறு பிறவி இருந்தால் செருப்பாக பிறக்க வேண்டும்
என்னை சுமந்த அம்மாவை ஒரு முறை நான் சுமப்பதற்காக.......

பெண்

இள வயதில் மன உளச்சல் ஏற்பட இரண்டு காரணங்கள்
1. மதிப்பெண்கள்
2. மதிக்காத பெண்கள்.
அன்பில் ஒரு தாய்
அழகில் ஒரு தேவதை
அறிவில் ஒரு ஞானி
ஆதரவில் ஒரு உறவு
வெறுப்பில் ஒரு நெருப்பு
வெற்றிக்கு ஒரு மலை
தோல்விக்கு ஒரு பள்ளம்
நட்பில் ஒரு நேர்மை
கண்டிப்பில் ஒரு ஆசிரியர்
மொத்தத்தில் பெண் ஒரு புரியாத புதிர்.

தன்னம்பிக்கை

முன்னேற்றத்திற்கு சுய முயற்சியே காரணம்
முயற்சி சிறகுகளை கத்தரித்துக் கொண்டவர்கள்தான்
சூழ்நிலையை குறை கூறுவார்கள்.
உதாரணம் - பருத்தி விளைவது சூழ்நிலை
ஆடை அணிவது சுய முயற்சி
வெற்றி : இதுவரை நான் பெறாதது
தோல்வி : அடிக்கடி சந்திப்பது
பாசம் : அவ்வப்போது வந்து போவது
கோபம் : கேட்காமல் வருவது
பாராட்டு : கிடைத்ததும் நிலைக்காதது
சொந்தங்கள் : எதுவும் எனக்காக இல்லை
கனவுகள் : எப்போதும் இருப்பது
சிரிப்பு : சிலரால் வருவது
நிழல் : என்னோடு கூடவே வருவது
மகிழ்ச்சி : வெளி உலகத்திற்கு மட்டுமே.

வேண்டும்.......வேண்டும்.......

அன்பு செலுத்திட வேண்டும்
ஆறுதல் தந்திட வேண்டும்
கல்வி பயின்றிட வேண்டும்
களவு ஒழிந்திட வேண்டும்
சோர்வு கலைந்திட வேண்டும்
சோலை மலர்ந்திட வேண்டும்
உழைப்பை மதித்திட வேண்டும்
உள்ளன்போடு உதவிட வேண்டும்
வீரம் நிறைந்திட வேண்டும்
விவேகம் வளர்ந்திட வேண்டும்
நீதி நிலைத்திட வேண்டும்
நேர்மையோடு வாழ்ந்திட வேண்டும்
வாய்மை வென்றிட வேண்டும்
பசுமை தழைத்திட வேண்டும்
வெற்றியில் களித்திட வேண்டும்
மனைவியை நேசித்திட வேண்டும்
நன்மக்களை பெற்றிட வேண்டும்
பாரதம் உயர்ந்திட வேண்டும்.

Copyright 2017 © Reserved, Tamilnavarasam Visitor Counter. Website designed by Glad India Technologies Pvt. Ltd.,