பருக
பழரசம்!

பார்க்க
பரவசம்!!

படிக்க
நவரசம்!!!

அறிஞர் அண்ணா

ஆரம்ப வாழ்க்கை:
அண்ணா அவர்கள் நடராஜன் மற்றும் பங்காரு அம்மாளுக்கு மகனாக செப்டம்பர் 15, 1909-ல் காஞ்சிபுரத்தில் பிறந்தார். இவர் செங்குந்த முதலியார் வகுப்பை சார்ந்த ஒரு நடுத்தர நெசவாளர் குடும்பத்தை சேர்ந்தவர். இவர் தனது பள்ளி படிப்பை சென்னையிலுள்ள பச்சையப்பா உயர்நிலைப் பள்ளியில் தொடங்கினார். ஆனால் தன்னுடைய குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாக தனது பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தில் கிளர்க்காக வேலை புரிந்தார். பிறகு அவர் தன்னுடைய பட்டப் படிப்பை பச்சையப்பா கல்லூரியில் தொடர்ந்தார்.
1930-ல் தனது 21வயதில் ராணியை மணம் முடித்தார். பின்னர் 1934-ல் பி .ஏ (ஹானர்ஸ்) பட்டமும், பிறகு எம். ஏ (பொருளாதாரம் மற்றும் அரசியல்) முதுகலை பட்டமும் பெற்றார். தன்னுடைய கல்லுரி வாழ்க்கைக்கு பிறகு ஆங்கில ஆசிரியராக பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் தனது ஆசிரியர் பணியை தொடர்ந்தார். ஆனால், குறுகிய காலத்திலேயே ஆசிரியர் தொழிலை விட்டு பத்திரிக்கை மற்றும் அரசியலில் ஈடுபாடுகொண்ட அண்ணா தன்னை முழு அரசியல்வாதியாக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கினார்.
அண்ணாவின் அரசியல் தொடக்கம் :
தனது கல்லூரி வாழ்க்கைக்கு பிறகு அரசியலில் ஈடுபட மிகவும் ஆர்வம் கொண்ட அண்ணா 1934 ஆம் ஆண்டு கோயமுத்தூர் மாவட்டம் திருப்பூரில் நடந்த ஒரு இளைஞர் மாநாட்டில் பெரியாருடனான முதல் சந்திப்பு ஏற்பட்டது. அவருடைய கொள்கைகள் மிகவும் அவரை ஈர்த்தது. அதனால் பெரியாரின் நீதி கட்சியில் சேர்ந்து அரசியல் பணியாற்றினார். பிறகு பெரியாருக்கும் அண்ணாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நீதி கட்சியிலிருந்து பிரிந்து “திராவிட முன்னேற்ற கழகம்” (தி.மு.க) என்ற தனது சொந்த கட்சியை 1949 ல் உருவாக்கினார். நீதி கட்சி பத்திரிகையின் உதவி ஆசிரியராக இருந்த இவர், பிறகு விடுதலை மற்றும் அதன் துணை பத்திரிக்கையான குடியரசு பத்திரிக்கைக்கு ஆசிரியராக பணியாற்றினார். அது மட்டுமல்லாமல் “திராவிட நாடு” என்ற தலைப்பில் ஒரு தமிழ் இதழையும் தொடங்கினார்.
திமுக உருவாக்கம்:
பெரியார் தன்னைவிட 40 வயது இளையவரான மணியம்மையை மணந்ததால் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு அண்ணாவும் அவருடைய ஆதரவாளர்களும் திராவிட கட்சியை விட்டு வெளியேறி 1949ல் “திராவிட முன்னேற்ற கழகம்” (தி.மு.க) என்ற தனது சொந்த கட்சியை பெரியாரின் மருமகன் இ.வி.கே சம்பத்துடன் இணைந்து உருவாக்கினார். இக்கட்சி குறுகிய காலத்தில் மக்களிடையே பெரும் செல்வாக்கையும், ஆதரவையும் பெற்றது.
1962 ல் நடந்த மாநிலங்கள் அவையில் அவர் பேசுகையில், ‘நாங்கள் கோருவது தென்னிந்தியா என்ற நாடு’என்று உரையாற்றினார். அதன் பிறகு இந்தியா மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்டு, தமிழர்கள் வாழும் பகுதி மதராஸ் (தமிழ் நாடு) மாநிலமாக உருவாக்கப்பட்டது. “அண்ணா திராவிட நாடு, திராவிடர்கே!’ என்ற உண்மையை உணர்ந்த அவர் அக்கொள்கையை கைவிட்டார்.
இந்தி எதிர்ப்பு :
காங்கிரஸ் கட்சி 1938-ல் மதராஸ் மாகாணத்தில் சி. ராஜகோபாலாச்சாரி தலைமையில் அனைத்து பள்ளிகளிளும் கட்டாய மொழியாக இந்தி பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இதை விரும்பாத அண்ணா, பாரதிதாசன், தமிழ் ஆன்றோர்கள், புலவர்கள், அரசியல் தலைவர்கள் என அனைத்து தமிழ் பற்றாளர்களும் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இது மிகபெரிய போராட்டமாக வெடித்தது மட்டுமல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டனர். இந்த போராட்டத்தில் நடராஜன் என்பவர் தமிழுக்காக உயிரையும் தியாகம் செய்தார். அவரின் இறப்பு, இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் ஒரு முக்கிய தூண்டுகோலாகவும் இருந்தது. இதன் விளைவாக பிப்ரவரி 1938 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அண்ணாதுரை, பாரதிதாசன் உட்பட பல தமிழறிஞர்கள் கலந்துகொண்டு தங்களுடைய எதிர்ப்பை வெளிபடுத்தினர்.இந்த போராட்டம் 1967 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அண்ணா வெற்றி பெற ஓர் முக்கிய காரணமாகவும் அமைந்தது.
தமிழக முதல்வராக அண்ணா:
1967 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து ஒன்பது மாநிலங்களில் தி.மு.க வெற்றிபெற்றது. ஆனால் காங்கிரஸ் கட்சி சென்னையில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 1967 பிப்ரவரியில் சென்னை மாநில அமைச்சர் ஆனார் அண்ணா. ஆட்சி பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கி தனது திராவிடப் பற்றை உறுதிபடுத்தினார். மேலும் மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை “தமிழ் நாடு” என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார். அது மட்டுமல்லாமல் கர்நாடகா, ஆந்திர பிரதேசம், மற்றும் கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் நிலவும் மூன்று மொழி திட்டத்துக்கு எதிராக தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழி கொள்கையை அமல்படுத்தினார். பின்னர் ஜனவரி 3, 1968 ஆம் அண்டு “இரண்டாம் உலக தமிழ் மாநாடு” நடத்தப்பட்டது. ஏப்ரல்-மே 1968 இல் யேல் என்ற அமெரிக்க பல்கலைக்கழகம் இவருக்கு “சுபப் பெல்லோஷிப்” என்ற விருதை வழங்கி கௌரவித்தது. இந்த விருதை பெற்ற அமெரிக்க அல்லாத ஒரு இந்தியர் என்ற பெருமையை தேடித்தந்தது. பின்னர் அதே ஆண்டில், அவருக்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் மூலமாக கெளரவ முனைவர் பட்டமும் வழங்கப்பட்டது.
அண்ணாவின் இலக்கிய பங்களிப்பு:
அண்ணா அரசியல் வாழ்க்கையை தவிர, நாடகங்களுக்கும், திரைபடங்களுக்கும் திரைக்கதைகள் எழுதும் திறமை படைத்தவராக விளங்கினார். அது மட்டுமல்லாமல் அண்ணாதுரை ஒரு மிகச் சிறந்த தமிழ் சொற்பொழிவாளரும், மேடைப் பேச்சாளரும் ஆவார்.
அவர், அவருக்கே உரித்தான தனிப்பட்ட பாணியில் அனைவரையும் கவர்கின்ற வகையில் பேசும் திறன் மற்றும் எழுத்தாற்றலும் பெற்றவராக விளங்கினார். அவர் பல நாவல்கள், சிறுகதைகள், மற்றும் அரசியல் சார்ந்த மேடை நாடகங்களையும் எழுதினார். அவர் தனது சொந்த நாடகங்களில் நடித்தும் உள்ளார். மேலும் 1948 இல் எழுதப்பட்ட இலட்சிய வரலாறு மற்றும் வாழ்க்கை புயல், ரங்கோன் ராதா, பார்வதி பி.ஏ., கலிங்கா ராணி மற்றும் பாவையின் பயணம் இவரின் முக்கிய படைப்புகளாகும்.
அண்ணாவின் திரைப்பட வாழ்க்கை:
1948 ஆம் ஆண்டு ‘நல்லதம்பி’ என்ற திரைப்படத்தை முதன் முதலில் அரங்கேற்றினார். இந்த படம் ஜமீன்தாரி ஒழிப்புமுறையை வலியுறுத்தி எடுக்கப்பட்டத் திரைப்படமாகும். இந்த படத்தில் என்.எஸ். கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் இவருக்கு 12,000 ரூபாயை பெற்றுத்தந்தது இது அந்த நேரத்தில் ஒரு பெரிய தொகையாகும். அதுமட்டுமல்லாமல் இவரின் மிகச்சிறந்த நாவலான வேலைக்காரி (1949) மற்றும் ஒர் இரவு, போன்ற நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டன. இத்தகைய திரைப்பட பணியின் மூலமாக இ.நாராயணசுவாமி, K.R. ராமசாமி, N.S. கிருஷ்ணன், எஸ் ராஜேந்திரன், சிவாஜி கணேசன், மற்றும் எம்.ஜி. ராமச்சந்திரன் போன்ற திரை நட்சத்திரங்களின் ஆதரவு இவருக்கு கிடைக்கபெற்றது.
இறப்பு:
இரண்டு ஆண்டு காலம் தமிழக முதல்வராக பணியாற்றிய அண்ணாதுரை 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி இறந்தார். அவர் புற்று நோயால் அவதிபட்டுக் கொண்டிருந்த போதிலும், அவர் தன்னுடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டார். அவருக்கு புகையிலை மெல்லும் பழக்கம் இருந்ததால், அவரது உடல் நிலை மேலும் மோசமடைய செய்தது. அவரின் இறுதி மரியாதையில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வு “கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில்” இடம் பெற்றுள்ளது. அவரது இறுதி ஊர்வலத்தில் சுமார் 15 மில்லியன் மக்கள் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர். இவருடைய உடல் சென்னையிலுள்ள மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. அதன் பிறகு இவரின் நினைவை போற்றும் வகையில் இவ்விடம் அண்ணா சதுக்கம் என்ற பெயரில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
நினைவுகளை பறைசாற்றும் சின்னங்கள் :
திமுக வில் கட்சி பிளவு ஏற்பட்டு நடிகர் எம்.ஜி. ராமச்சந்திரனால் 1972 ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அ.இ.அ.தி.மு.க) என்ற புதிய கட்சி அண்ணாவின் பெயரால் உருவாக்கப்பட்டது. அண்ணாவை நினைவு கூறும் வகையில் சென்னையிலுள்ள ஒரு குடியிருப்புக்கு “அண்ணா நகர்” என பெயரிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் முதன்மையான தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தற்போதிய திமுக தலைமைச்செயலக கட்டிடத்துக்கு அவரின் நினைவாக “அண்ணா அறிவாலயம்” என்றும் பெயர்சூட்டப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய சாலையான மவுண்ட் ரோடு “அண்ணா சாலை” என அவரது பெயரால் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, சிலை கூட அங்கு அமைக்கப்பட்டது, மேலும் “அண்ணா நூற்றாண்டு நூலகம்” அண்ணாதுரை என்ற உயர்ந்த மனிதருக்கு காணிக்கையாக 2010 ஆம் ஆண்டு சென்னையில் நிறுவப்பட்டது.

குமரிக் கோட்டம் Download
மடல்கள் Download
நாவல் Download
ஓர் இரவு Download
புராண மதங்கள் Download
ரங்கோன் ராதா Download
சிறுகதைகள் Download
வேலைக்காரி Download
Copyright 2017 © Reserved, Tamilnavarasam Visitor Counter. Website designed by Glad India Technologies Pvt. Ltd.,